நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
பிஸியான சினேகா
தமிழில் என்னவளே என்ற படத்தின் மூலம் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை சினேகா, ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சினேகா 2012 ஆம் ஆண்டு பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வரும் சினேகா, ரியாலிட்டி ஷோக்களுக்கு ஜட்ஜ் ஆக பங்கேற்று வருகிறார். ஆரம்பத்தில் இருந்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கும் நடிகை சினேகா, இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
இளமை அழகு
சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகர் சினேகா, அடிக்கடி தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அதிலும் அதிகமாக புடவையிலேயே போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் தனது இளமையை பாதுகாத்து வரும் நடிகை சினேகா சமீபத்தில் மாடர்ன் உடலில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றது. எப்பொழுதும் பட்டுப்புடவை, தலை நிறைய மல்லிப்பூ என்று ஜொலிக்கும் சினேகா இதில் வித்தியாசமான கர்லி ஹேர் ஸ்டைல்லுடன் மாடல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.















































