காங்கிரஸ் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
தொடர் முன்னிலை
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி 115 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான பாஜக 74 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 29 இடங்களிலும், சுயேச்சை உள்ளிட்ட மற்றவர்கள் 6 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றனர். பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிட்டது.
தலைமை உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில் இருப்பதை அடுத்து நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஓட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பெங்களூரு வர காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.