நடிகை இலியானா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஷங்கர் நாயகி
தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான நடிகை இலியானா, தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். ரவி கிருஷ்ணாவுடன் இணைந்து இவர் நடித்த கேடி திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. பிறகு தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த இலியானா, தமிழில் நண்பன் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் இலியானாவின் மெல்லிய தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பாலிவுட்டில் செட்டில்
தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்த நடிகை இலியானா, ரன்பீர் கபூருடன் இணைந்து பர்ஃபி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெளியான முதல் ஹிந்தி படமே சூப்பர் ஹிட் ஆனதால் பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு எந்த தமிழ் படங்களிலும் நடிக்காமலேயே இருந்து வந்த இவர், கத்ரீனா கைஃப் சகோதரரை காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் வெளிப்படையாக கூறாமல் இருந்து வந்த நடிகை இலியானா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூ நீபோன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
பேபி பம்ப்
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது கர்ப்பத்தை இன்ஸ்டா மூலம் வெளிப்படுத்தி இருந்தார் இலியானா. தற்போது கர்ப்பமாக இருக்கும் தனது பேபி பம்புடன் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். கருப்பு நிற டைட்டான உடையில் இலியானா வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு, ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.















































