பிக் பாஸ் ஜூலி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானதை பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
பிக் பாஸ் பிரபலம்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி, பிக் பாஸில் பங்கேற்றதன் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பிக் பாஸ் சீசன் 1இல் கலந்து கொண்டு இவர் விளையாடியது அனைவரையும் டென்ஷன் அக்கியதுடன், இவருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக குவிந்தது. ஆனால் அதன்பிறகு பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக விளையாடி அனைவர் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தார்.
திருமண புகைப்படங்கள்
ஜூலி தற்போது சில படங்களிலும், சீரியல்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் “தென்றல் வந்து என்னை தொடும்” தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது ஜூலி திருமண கோலத்தில் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. ஜூலிக்கு திருமணம் ஆகிவிட்டதோ என அவரது ரசிகர்கள் ஷாக் ஆகினர். ஆனால், அதேதொடரில் அவருடன் நடிக்கும் ராஜ்குமாருடன் ஜூலி இருப்பதால் “தென்றல் வந்து என்னை தொடும்” தொடருக்காக தான் இந்த கெட்டப் என்று தெரியவந்துள்ளது.