தருமபுரி அருகே காட்டு யானைக்கு குடும்பிட்டு போட்ட கான்ட்ராக்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காட்டு யானை

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் உணவு, தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. இந்த நிலையில், பென்னாகரம் – ஒகேனக்கல் சாலையில் கொம்பன் யானை ஒன்று முகாமிட்டிருந்ததௌ. இந்த யானை அப்பகுதியில் கிடைக்கக் கூடிய இலை தழைகளை சாப்பிட்டு அங்கேயே சுற்றித்திரிகிறது.

கான்ட்ராக்டர் சேட்டை

நேற்று முன்தினம் கொம்பன் யானை சாலைக்கு வந்தபோது, அவ்வழியாக சென்ற பென்னாகரம் அடுத்த எட்டிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த கான்ட்ராக்டரும், டிராக்டர் டீலருமான முருகேசன் என்பவர் தனது வாகனத்தை நிறுத்தி, சாவகாசமாக காட்டு யானையின் அருகில் நடந்து சென்றார். பின்னர், இரண்டு கைகளையும் தூக்கி ஒரு பெரிய கும்பிடு போட்ட அவர், சாஷ்டாங்கமாக யாயின் கால் அருகே விழுந்து வணங்கினார்.

மறுபடியும் கும்பிடு

காட்டு யானைகள் வழக்கமாக மனிதர்களை துரத்தும் அல்லது தாக்கும். ஆனால், அந்த யானையோ சாதுவாக நின்று, எதுவும் செய்யாமல் முருகேசன் செய்த சேட்டைகளை வேடிக்கை பார்த்தது. அப்போதும் விடாத முருகேசன், யானைக்கு மறுபடியும் ஒரு கும்பிடு போட்டு, சாவகாசமாக அங்கிருந்து நடையை கட்டினார். அதனை காரில் வந்த அவரது நண்பர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here