நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நடிகை சாய் பல்லவிக்கு சொன்ன SK21 இயக்குநர் ராஜ்குமார் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தொடங்கிய படப்பிடிப்பு
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கும் நடிகை சாய் பல்லவி, நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். தமிழில் இவர் நடித்த படங்கள் ஏதும் பிரபலமாகவில்லை என்றாலும், மாரி படத்தில் இடம் பெற்றிருந்த ரவுடி பேபி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் சாய் பல்லவி நடித்த கார்கி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சூப்பர் ஹிட் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் நடிகை சாய் பல்லவி, தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
புகழ்ந்த இயக்குநர்
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சாய் பல்லவிக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். தற்போது SK21 இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் டியர் சாய் பல்லவி. நீங்கள் ஆகச் சிறந்தவர், கடவுள் உங்களுக்கு எல்லாவற்றையும் சிறந்ததாகவே கொடுக்கட்டும். நீங்கள் என் படத்தில் இருப்பதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். படத்தின் பூஜையில் இருந்ததற்கு நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.