இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகை திரிஷாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

கனவுக்கன்னி

ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் தலைகாட்டி, அதன்பிறகு “லேசா லேசா” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. ஆனால் அந்த படம் வெளிவதற்கு முன் “மௌனம் பேசியதே” படத்தில் கமிட்டாகி அந்த படம் முதலில் வெளியானது. இதனால் மௌனம் பேசியதே படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். அதன்பிறகு இவரது நடிப்பில் வெளியான அலை, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி ஆகிய படங்கள் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களாக அமைந்ததால், ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக வலம் வந்தார் திரிஷா.

முன்னணி நடிகை

தெலுங்கிலும் தனது நடிப்புத் திறனை வெளிக்காட்டி இன்று வரை தெலுங்கிலும் முன்னணி நடிகையாகவே இருந்து வருகிறார் திரிஷா. விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து சினிமா துறையில் முன்னணி நடிகையாக நிலைத்து நிற்கிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமும் திரிஷாவின் சினிமா கெரியருக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது. தற்போது லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா.

குவியும் வாழ்த்துக்கள்

இந்நிலையில், நடிகை திரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு, எப்பொழுது திருமணம் என்ற ஒரே கேள்வி தான் அனைத்து ரசிகர்கள் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. 40 வயது ஆகிவிட்டது “ஹாப்பி நியூஸ் சொல்லுங்க” என்று ரசிகர்கள் அன்பு கட்டளை இட்டு வருகின்றனர். மேலும் பிறந்தநாளை கொண்டாடி வரும் திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும், ஹார்ட்டின்களையும் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here