நடிகர் மனோபாலாவின் உடலுக்கு வடபழனி மின்மயானத்தில் இறுதி சடங்கு செய்யப்படுகின்றது.

மறைந்த மனோபாலா

இயக்குநரும், நடிகருமான மனோ பாலா நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். மனோ பாலாவின் திடீர் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அவரது உடலுக்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 1982 ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் மனோ பாலா. நான் உங்கள் ரசிகன், பாரு பாரு பட்டணம் பாரு, சிறை பறவை, தூரத்து பச்சை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். எச்.வினோத் அறிமுகமான சதுரங்க வேட்டை படத்தை தயாரித்தவரும் இவர் தான்.

கதறிய பிரபலங்கள்

69 வயதான நடிகர் மனோ பாலா, கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். சில படங்களில் பிசியாக நடித்த மனோபாலா உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த அவர், திடீரென உயிரிழந்தார். இதனை அடுத்து சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மனோ பாலாவின் உடலுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்த நிலையில், நடிகர் விஜய் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடைசியாக இந்தியன் 2 படத்தில் மனோ பாலா நடித்து வந்ததாக கூறப்படுகிறது. நடிகர் விவேக் மற்றும் மனோபாலா இருவருக்கும் இந்தியன் 2 படம் தான் கடைசி படம் என்று சொல்லப்படுகின்றது. மறைந்த மனோ பாலாவின் உடல் வடபழனி மின் மயானத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here