ஹாலிவுட் நடிகை போல் மாறுவதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட மாடல் அழகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹாலிவுட் நடிகை
பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியனுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கிம் கர்தாஷியனைப் போல முக அமைப்பு வேண்டும் என்ற ஆசையில், அவரது சில ரசிகர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

பரிதாப மரணம்
அதில், கிறிஸ்டினா ஆஸ்டன் கோர்கானி என்ற மாடல் அழகி, கிம் கர்தாஷியன் போல மாறுவதற்கு ஆசைப்பட்டு பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், அவர் கடந்த 26 ஆம் தேதி மரணமடைந்தார். 34 வயதான கிறிஸ்டினா ஆஸ்டன் கோர்கானி மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தவறான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் அவரது இறப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று கிறிஸ்டினாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.















































