கேரளாவில் திருவனந்தபுரம் – காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உற்சாக வரவேற்பு

2 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை கேரளா வந்தடைந்தார். கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையுடன் வந்த பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கொச்சியில் நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இளைஞர் அமைப்பினர் நடத்திய மாநாட்டிலும் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கேரள மக்கள் மாற்றத்தை விரும்புவதாக அவர் கூறினார்.

மாற்றத்தை விரும்புகிறார்கள்

நிகழ்ச்சிகள் முடிந்த பின் கொச்சியில் தங்கிய பிரதமர், இன்று காலை அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். விமான நிலையத்தில் பிரதமரை, ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

ரயில் சேவை

அதன்பின்பு திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையம் சென்ற பிரதம நரேந்திர மோடி, திருவனந்தபுரம் – காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடிக்கு, சாலையின் இருபக்கமும் நின்ற பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமரின் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here