மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடும் எதிர்ப்பு

தமிழகத்தில் காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், இந்த இடத்தில் விவசாய பணிகளை தவிர வேறு எந்த வேலைகளையும் மேற்கொள்ள முடியாது. அப்படி இருக்கும்போது, இந்த இடங்களில் எப்படி நிலக்கரி எடுக்கும் பணியை மேற்கொள்ள முடியும்? என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என்று கூறியிருந்தார்.

திட்டம் ரத்து

இந்நிலையில், காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டுவீட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here