நடிகை நமீதாவுக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்ததற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.
கொஞ்சல் பேச்சு
2002 ஆம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா கெரியரை துவங்கிய நடிகை நமீதா, ‘எங்கள் அண்ணா’ என்ற விஜயகாந்த் நடிப்பில் வெளியான படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு மகா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, பம்பரக் கண்ணாலே, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் இருந்து கவர்ச்சிக்கு குறைவில்லாமல் நடித்து வந்த நடிகை நமிதா, நான் அவன் இல்லை, வியாபாரி, பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இவர் கெரியரை தொடங்கிய நாள் முதலே இவரது கொஞ்சலான தமிழுக்கும், நடிப்பிற்கும் பல ரசிகர்கள் உருவாகி விட்டனர்.
உயரமே பிரச்சனை
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளிலும் நடித்து வந்த நமிதாவிற்கு அவரது உயரமே பிரச்சனையாக அமைந்தது. நடிகர்களை விட அதிகமாக உயரம் இருப்பதால் இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் பல படங்களில் நடித்து வந்தார் நமிதா. அதனாலயே அந்த படங்களை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. பல தோல்வி படங்களை கொடுத்த நடிகை நமீதா கம்பேக் கொடுக்கும் விதமாக பிக் பாஸில் பபங்கேற்றார். ஆனால் 28 வது நாளில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார் நமிதா. தற்போது நமிதா எடையும் சற்று கூடி இருப்பதால் உயரமும் அதிகமாக இருப்பதாலே பல பட வாய்ப்புகள் இவரை விட்டு நழுவுவதாக சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு நிலவி வருகிறது. ஆனாலும் நமீதா தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்க இயக்குநர்களிடம் கதைகளை கேட்டு வருகிறார்.















































