இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பன்முக திறமையாளர்
1973 ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி பிறந்த நடிகர் பிரபுதேவா, 1994 ஆம் ஆண்டு ‘இந்து’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். காதலன், ராசையா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி என்று தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த நடிகர் பிரபுதேவா, 90களில் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் சேர்ந்தார். தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரபுதேவா, 2007 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘போக்கிரி’ என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். முரளி நடித்த இதயம் படத்தில் பிரபலமான ‘ஏப்ரல் மேயில’ பாடலின் மூலம் முன்னணி நடன கலைஞராக அறிமுகமானார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அதன்பிறகு நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து அசத்தினார். அவரது நடிப்பில் உருவான ஏழையின் சிரிப்பில், உள்ளம் கொள்ளை போகுதே, பெண்ணின் மனதை தொட்டு, மின்சார கனவு உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. நடிகர். நடன கலைஞர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என்று அனைத்திலும் முன்னிலையில் உள்ளார். தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் புகழப்படுபவர் பிரபுதேவா. இன்று வரை இவரது நடன அசைவுகளுக்கும், நடனத்திற்கும் நிகரானவர் சினிமா துறையில் இல்லை என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு தனது நடனத்தால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். நடிகராகவும், நடன கலைஞராகவும் பல ரசிகர்களை சேர்த்து வைத்துள்ள நடிகர் பிரபுதேவாவிற்கு இன்று பிறந்தநாள். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.