மேக் அப் இல்லாமல் நடிப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார் நடிகை சாய் பல்லவி.
ரவுடி பேபி
விஜய் டிவியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இவர் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் இவரது ரவுடி பேபி பாடல் இன்றும் யூடியூப் டிரெண்டாகவே இருந்து வருகிறது. மேக்கப் இல்லாமல் நேச்சுரல் பியூட்டி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சாய் பல்லவி, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார். அதுவும் கவர்ச்சி இல்லாத கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நேச்சுரல் பியூட்டி
சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். நடிகைகள் என்றாலே மேக்கப், காஸ்டியூம் என்று பளபளப்பாகவே இருப்பார்கள் என்ற கருத்துக்களுக்கு மத்தியில், மேக்கப் இல்லாமல் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் சாய் பல்லவி. பிரேமம் படத்தில் மேக்கப் இல்லாமல் இவர் நடித்து பலரின் மனதையும் கொள்ளை கொண்டார். ரசிகர்களை அந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்ததால் “நேச்சுரல் பியூட்டி சாய் பல்லவி” என்று புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மேக்கப் இல்லாமல் நடிப்பது குறித்து நடிகை சாய் பல்லவி வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது; “என்னுடைய முதல் படமான பிரேமம் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்தேன். ரசிகர்கள் அதை ரசித்தனர். அது எனது நம்பிக்கையை அதிகரித்தது. அதனால் தான் மேக்கப் இல்லாமல் நடிக்க விரும்புகிறேன். இயக்குநர்கள் கூட இந்த விஷயத்தில் என்னை வற்புறுத்துவது கிடையாது” என்று கூறியுள்ளார். பொது விழாக்கள், பட ப்ரோமோஷன் என்று அனைத்து இடத்திலும் கவர்ச்சியாக வரும் நடிகைகளுக்கு மத்தியில் புடவையில் வந்து ரசிகர்களின் அன்பை பெறுகிறார் நடிகை சாய் பல்லவி. அதுமட்டும் இல்லாமல் சில மணிநேரமே பேசினாலும், பெண்களின் பாதுகாப்பை பற்றியும், முக்கியத்துவத்தை பற்றியும் பேசும் நடிகை சாய் பல்லவி உண்மையிலேயே நேச்சுரல் பியூட்டி தான்.