அருவி தொடரில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் லாவண்யா தனது வயதை கூறி ட்ரோலில் சிக்கி உள்ளார்.
குணச்சித்திர நடிகை
பல தமிழ் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் லாவண்யா. வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். கடந்த 1997 ஆம் ஆண்டு சூரியவம்சம் படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் லாவன்யா. அதன் பிறகு பத்ரி, தெனாலி, படையப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி தொடரில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுயம்வரம், ஜோடி, சங்கமம், சேது, தெனாலி, பூவெல்லாம் உன் வாசம், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் லாவண்யா. சமீபத்தில் வெளியான பகாசுரன் படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
வயது வித்தியாசம்
கடந்த 19ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட லாவண்யாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அது மட்டும் இல்லாமல் லாவன்யாவிற்கு 44 வயது என்று குறிப்பிட்டு செய்திகள் வெளிவந்தது. இதனை மறுத்துள்ள லாவண்யா தனக்கு 44 வயது இல்லை என்றும், 43 தான் ஆகிறது என்றும் கூறியுள்ளார். இவர் கூறியதை பார்த்து கடுப்பான ரசிகர்கள் இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்று கூறி வருகின்றனர். தனது கடமைகளை முடித்துவிட்டு லேட்டாக திருமணம் செய்து கொண்டார் என்று இவரை புகழ்ந்து வந்த நிலையில், ஒரு வயசு வித்தியாசத்தை கண்டுபிடித்து குறை கூறிய லாவண்யாவை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.