தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

பன்முக திறமையாளர்

கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியாவுக்கு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா நடித்த இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். முன்னணி கதாபாத்திரத்தில் இவர் நடித்த முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதும், அடுத்தடுத்து வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார் நடிகை ஆண்ட்ரியா. தரமணி, வடசென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக முத்திரை பதித்துக் கொண்டார்.

அடுத்தடுத்த படங்கள்

தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பல படங்கள் வெளிவர தயாராக உள்ளது. அதில் பிசாசு 2 திரைப்படமும், கா, மாளிகை போன்ற திரைப்படங்கள் படப்பிடிப்புகள் முடிந்து வெளிவரும் கட்டத்தில் உள்ளது. அதன்பிறகு, பாபி சிம்ஹாவுடன் ஒரு படமும், தினேஷ் செல்வராஜ் இயக்கும் படத்திலும் தற்போது நடித்து வரும் ஆன்ட்ரியா, “நோ என்ட்ரி” படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நோ என்ட்ரி படத்தில் ஆண்ட்ரியா உடன் இணைந்து பிரதாப் போத்தன், ரம்யா ராவ், ஆதவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அழகு கார்த்திக் இயக்கும் இந்த திரைப்படம் திரில்லர் கதை அம்சம் உள்ள படமாக உருவாகியுள்ளது.

ஹெவி வொர்க் அவுட்

இப்படி பல படங்களில் பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். யோகா, உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா, சமீபத்தில் ஹெவி வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டும், லைக்குகளை குவித்தும் வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here