எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்து தனது ஸ்டைலில் மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

துணை நடிகர்

இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே. சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் மாரிமுத்து. கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். நடிகராக தன்னை நிரூபித்து தற்போது பல முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து வருகிறார். வாலி, கொம்பன், திரிஷா இல்லனா நயன்தாரா, கொடி, பைரவா, எமன் போன்ற படங்களில் மட்டும் இல்லாமல், கிட்டத்தட்ட 75 படங்களுக்கும் மேல்வர் நடித்துள்ளார்.

மிரட்டும் வாழ்த்துக்கள்

தற்போது டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார் மாரிமுத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். சில நாட்கள் ஆகவே இவரை சுற்றி பல சர்ச்சைகள் நிலவி வந்தது. ஆனால் அந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த மாரிமுத்து, தற்போது மகளிர் தின வாழ்த்துக்களை தனது ஸ்டைலில் பதிவிட்டுள்ளார். உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் பதிவிட்டு வந்த நிலையில், எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்து “Happy womens day” என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here