இன்ஸ்டாகிராமில் 25 மில்லியன் ஃபாலோவர்களை பெற்றுள்ள நடிகை சமந்தா அதனை பகிர்ந்து ரசிகர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்பார்ப்பில் சாகுந்தலம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர், சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படம் பலரின் கவனத்தை பெற்றது. தற்போது இவரது நடிப்பில் வெளிவர இருக்கும் சாகுந்தலம் திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இந்த சாகுந்தலம் திரைப்படம், ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக இருக்கிறது.
ஷோஷியல் மீடியா
தீவிரமான உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் நடிகை சமந்தா. பொதுவாக முன்னணி நடிகையாக இருப்பவர்கள் சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருப்பார்கள். ஆனால் நடிகை சமந்தா அடிக்கடி தனது படத்தின் போஸ்டர்களையும், போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருவார். அதுமட்டுமில்லாமல் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களும், ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு சமூக வலைதளத்தில் எப்பொழுது ஆக்டிவாகவே இருப்பார்.
கொண்டாட்டத்தில் சமந்தா
கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நடிகை சமந்தா, தற்போது மெல்ல மெல்ல தேறி வருகிறார். அது மட்டும் இல்லாமல் வழக்கம் போல் தீவிரமாக உடற்பயிற்சியும் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராமில் 25 மில்லியன் ஃபாலோவர்களை பெற்றுள்ளார். இந்த சந்தோஷமான செய்தியை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டு ரசிகர்களிடம் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.