கல்லீரல் பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பாலாவுக்கு தீவிர சிகிச்சை ளிக்கப்பட்டு வருகிறது.

இயக்குநரின் தம்பி

பிரபல இயக்குநரான சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா, “டூ மச்” என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் அன்பு என்ற படத்தில் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான இவர், அப்படத்திற்குப் பிறகு காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். நடிகர் பாலாவுக்கு மலையாளத்தில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.

குணச்சித்திர கதாபாத்திரத்தில் பாலா

அஜித்துடன் வீரம் படத்திலும், ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார் பாலா. இவர் முதல் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு, இராண்டாவதாக எலிசபெத் என்ற மருத்துவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பாலாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர். பாலாவின் நெருங்கிய நண்பர்களான உன்னி முகுந்தன், தயாரிப்பாளர் பாதுஷா விஷ்ணு மோகன், ஸ்வராஜ் மற்றும் விபின் உள்ளிட்ட பலரும் மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர். ஏற்கனவே உடல் நலக்குறைவால் மருத்துவர்கள் அணுகியுள்ள நடிகர் பாலா தற்போது கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் நடிகர் பாலா தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here