பாலிவுட்டில் பிரபலமாகி இருக்கும் நடிகை ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தில் கமிட் ஆனதன் மூலம் டோலிவுட்டிலும் கால் பதிக்க உள்ளார்.

நட்சத்திர வாரிசு
1980களில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பாலிவுடில் சில படங்களில் நடித்து பிரபலமாகி உள்ளார். அவரது தந்தை போனி கபூர் தயாரிப்பாளர் என்பதால் அவருக்கு நட்சத்திர வாரிசு அந்தஸ்தும் அதிகமாவே உள்ளது. ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு வெளியான தடாக் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஜான்வி கபூர். சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், தற்போது டோலிவுடிலும் அறிமுகமாக உள்ளார்.
கமிட் ஆன ஜான்வி
ஜூனியர் என்டிஆர் இன் 30வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் நடிகை ஜான்வி கபூர். கொரட்டலா சிவா இயக்கும் என்டிஆர் 30 படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் இணைந்ததை போஸ்டருடன் அவரது பிறந்தநாள் அன்று (நேற்று) வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர் படக் குழுவினர். கவர்ச்சியாக தாவணியில் அமர்ந்திருக்கும் நடிகை ஜான்வி கபூரின் இந்த போஸ்டர், இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ஜான்வி கபூர், இந்த போஸ்டரை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூருக்கு ரூ.4 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.













































