பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
பப்ளி வித்யா பாலன்
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வித்யா பாலன். ஸ்லிம் அண்ட் பியூட்டியாக இருந்தால் மட்டுமே ஹீரோயினாக இருக்க முடியும் என்ற எண்ணத்தை பாலிவுட்லிருந்து கொண்டு மாற்றியவர் அவர். தனது கொழு கொழு அழகால் ரசிகர்களை தன் வசம் படுத்தினார். ஹே பேபி, போல் புல்லையா உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான இவர், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாகின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தி டர்டி பிக்சர்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். மிஷன் மங்கள், பிரபல கணித மேதையான சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று படங்களில் வித்யா பாலன் நடித்து, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். தற்போது 45 வயதாகும் நடிகை வித்யா பாலனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
புதிய முயற்சி
பிரபல போட்டோகிராபரான டபூ ரத்னானியின் வருடாந்திர போட்டோஷூட்டுக்காக வித்யாபாலன் கொடுத்து உள்ள போஸ் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. முன்னணி நடிகர், நடிகைகளை போட்டோ எடுத்து வெளியிட்டு வரும் இவர், சமீபத்தில் வித்யா பாலனை புகைப்படம் எடுத்துள்ளார். அதில் நடிகை வித்யா பாலன் நியூஸ் பேப்பர் கொண்டு தனது உடலை மறைத்திருக்கும் வகையில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. டபூ ரத்னானி ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஹிரித்திக் ரோஷன், கரீனா கபூர் உள்ளிட்ட பலரையும் போட்டோ சூட் செய்து பிரபலமானவர். அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்திலும் அவர் அடிக்கடி வெளியிட்டு வருவார்.
இதே வேலை
அந்த வகையில் நடிகை கியாரா அத்வானி இலையைக் கொண்டு தனது உடலை மறைத்திருப்பது போல் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நடிகை சன்னி லியோன் பெரிய தொப்பியை வைத்து தனது உடலை மரத்திருப்பது போல புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆனது. தற்போது வித்யா பாலனையும் இதேபோல் புகைப்படம் எடுத்து கேலண்டர் போட்டோஷூட் நடத்தியுள்ளார் டபூ ரத்னானி. ஒரு பக்கம் இவரது வித்தியாசமான முயற்சியை பாராட்டுவதா? இல்லை இவருக்கு இதே தான் வேலையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.