Disney+ Hotstar OTT வெளியான “தி லெஜெண்ட்” திரைப்படம் ஸ்ட்ரீமிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளதாக லெஜண்ட் சரவணன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட படம்
தனது கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து வந்த லெஜண்ட் சரவணன், சினிமாவில் நடிக்க முடிவு செய்து தி லெஜண்ட் படத்தை தயாரித்தார். ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவான இப்படம் மிக பிரம்மாண்டமாக உருவானது. தி லெஜண்ட் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி ரிலீஸ் ஆனது. 800 திரையரங்குகளுக்கு மேல் இந்த படம் விநியோகம் செய்யப்பட்டது. இப்படத்தில் அண்ணாச்சியுடன் இணைந்து ஊர்வசி ரவுத்தாலா, நடிகர் விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தி லெஜண்ட் திரைப்படம் வெளியான புதிதில் பல ட்ரோல்களை சந்தித்து இருந்தாலும், பல பேர் இவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
முதலிடம்
இப்போதெல்லாம் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் ஒரு மாதத்திற்குள் OTTயில் வந்து விடுகிறது. அந்த வகையில் அண்ணாச்சி நடித்த தி லெஜண்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாட்களாக OTT ரிலீஸ் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவர வராமல் இருந்தது. இதைதொடர்ந்து நேற்று 12.30 மணிக்கு Disney+ Hotstar OTT தளத்தில் தி லெஜண்ட் திரைப்படம் வெளியானது. இந்நிலையில், இப்படம் ஸ்ட்ரீமிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளதாக லெஜண்ட் சரவணன் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.