லியோ படத்தில் நடித்ததற்காக இயக்குநரும், நடிகருமான மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

கடும் குளிர்

விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் திரிஷா, மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். காஷ்மீரில் லியோ படப்பிடிப்பை முடித்து திரும்பிய இயக்குநர் மிஷ்கின், படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும், இயக்குநர் லோகேஷ் கனகராஜூன் இயக்கத்தை பாராட்டி அவருக்கு நெற்றியில் முத்தமிட்டேன். அவர் ஒரு ராணுவ ஜெனரலை போல் அனைவரையும் சரியாக கட்டுப்படுத்துகிறார், இது ஒரு மறக்க முடியாத அனுபவம். எனது அன்புச் சகோதரர் விஜய்யுடன் நடிகராக பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் என் மீதான அன்பையும், பணிவையும் என்னால் மறக்க முடியாது. ‘லியோ’ படம் நிச்சயம் வெற்றி பெறும்’ என்று கூறியிருந்தார்.

மில்லியன் நன்றி

இதனிடையே தற்போது மிஷ்கினுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘மை டியர் மிஷ்கின் சார், உங்களுடன் இவ்வளவு நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாகவும் அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த கோடி நன்றிகள் போதாது. நீங்கள் இந்த படத்தில் இணைந்தது எங்களுக்கு முழு திருப்தி சார். நான் உங்களுக்கு ஒருபோதும் போதுமான நன்றி சொல்ல முடியாது, ஆனால் ஒரு மில்லியன் நன்றி! என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here