ஹாலிவுட் படங்களை பார்க்கும் குழந்தைகளுக்கு ஐந்து ஆண்டு¸û சிறை தண்டனையும், அவர்களது பெற்றோர்கள் ஆறு மாத காலம் தொழிலாளர் முகாம்களில் அடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வாதிகார ஆட்சி
வடகொரியா நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகின்றது. அங்கு அடிக்கடி வித்தியாசமான சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் தற்போது கிம் ஜாங் தலைமையான அரசு வித்தியாசமான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. வட கொரியாவில் உள்ள குழந்தைகள் ஹாலிவுட் அல்லது தென்கொரிய படங்களை பார்ப்பதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடுமையான கட்டுப்பாடு
அதையும் மீறி ஹாலிவுட் அல்லது தென்கொரிய படங்களை பார்க்கும் குழந்தைகளுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், அவர்களது பெற்றோர்களுக்கு ஆறு மாத காலம் வரை தொழிலாளர் முகாம்களில் அடைக்கப்படுபவர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றங்களில் ஈடுபடுபவருக்கு கருணை ஏதும் காட்டப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் இதனை கண்காணிக்க தனிக்குழுக்களையும் அமைத்திருப்பதாகவும் வட கொரியா அரசு தெரிவித்துள்ளது. வடகொரியாவில் ஊடகங்கள் உட்பட அனைத்தும் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால் பொழுதுபோக்கு அம்சங்களான பாடல் பாடுவது, நடனம் ஆடுவது போன்ற விஷயங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.