விமான பணிப்பெண்ணுடன் விஜய் மற்றும் திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது.
காஷ்மீரில் பிஸி ஷூட்டிங்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா இணைந்து நடிக்கும் திரைப்படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித்குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் ஏற்கனவே இணைந்த மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் படமாக அமைத்தது. தற்போது லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடப்பதால் பட குழுவினர் அனைவரும் காஷ்மீருக்குச் சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.
வெற்றி நிச்சயம்
லியோ படத்தில் அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் ஷேர் செய்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இன்று காலை படத்தின் தனது பகுதியை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் மிஷ்கின். அதில் தன்னுடன் பணியாற்றிய படக் குழுவினர் அனைவரையும் பாராட்டி அறிக்கை வெளியிட்டார். லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று அவர் கூறியிருந்தது விஜய் ரசிகர்களை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. 
வைரல் புகைப்படம்
இன்று மிஷ்கின் கொடுத்த அப்டேட்டை தொடர்ந்து இணையதளத்தில் இன்னொரு புகைப்படம் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றது. அதாவது விஜய் மற்றும் திரிஷா விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றது. அதில் விமான பணிப்பெண்ணுடன் இருவரும் இருக்கின்றனர். இந்த போட்டோ ரசிகர்களுக்கு வேற லெவல் அப்டேட்டாக அமைந்துள்ளது.















































