ராஜா ராணி 2 தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த ரியா சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியே வந்துள்ளது.
முன்னணி தொடர்
விஜய் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பானாலும் ராஜா ராணி தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ராஜா ராணி சீசன் 1 வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, ராஜா ராணி சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி கொண்டு இருக்கின்றது. இந்த தொடரில் ஆரம்பத்தில் சந்தியா என்ற முதன்மை கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்துக் கொண்டிருந்தார். அதன்பிறகு ரியா விஸ்வநாதன் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொண்டிருந்த இந்த தொடரில் இருந்து திடீர் என்று ரியாவும் மாற்றப்பட்டார். அதற்கு காரணம் அவர் திருமணம் செய்துகொள்ளப் போவதாக பலர் கூறி வந்தனர். ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரியா தனக்கு திருமணம் ஆக இரண்டு மூன்று வருடங்கள் ஆகும் என்று கூறியிருந்தார். தன்னை பற்றி வெளிவரும் அனைத்து விஷயங்களும் வதந்திகள் என்றும் அவர் கூறியிருந்தார்.
தேதி தான் பிரச்சனை
ரியாவின் கதாபாத்திரத்தில் ஆஷா கௌடா நடித்து வருகிறார். ரியா ஏன் சீரியலை விட்டு விலகினார் என்று ரசிகர் மந்தையில் இன்னும் குழப்பம் நிலவிக் கொண்டுதான் இருக்கின்றது. இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில், நடிகை ரியா அது எனக்கே தெரியாது என பதிவிட்டு, கம்யூனிகேஷன் பிரச்சனை என சீரியல் குழு தெரிவித்ததாக கூறியிருந்தார். அதற்கான முழு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. ராஜா ராணி 2 தொடர் 15ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை ஷூட்டிங் நடத்தப்படுமாம். இந்த 15 நாட்கள் அனைத்து நடிகர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என்பதற்கான ஷெட்யூல் அமைக்கப்பட்டு உள்ளதாம். ஆனால் ரியா தன்னுடைய பர்சனல் விஷயங்களுக்காக சூட்டிங் நடைபெறும் தேதியில் வெளியூருக்கு சென்றுள்ளார்.
மாற்றப்பட்ட நடிகை
அதனை ஏற்கனவே சீரியல் குழுவிடம் அறிவித்துள்ளார். அப்போது ஒப்புக்கொண்டு சீரியல் குழு, கைவசம் எபிசோடு இல்லாத காரணத்தால் ரியா கூறிய நாட்களில் மீண்டும் சூட்டிங் வரும்படி அழைக்க தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. அதனால் எபிசோடை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் வேறு வழியில்லாமல் அவசர அவசரமாக ஆஷா கௌடாவை ராஜா ராணி 2 சீரியலில் ஒப்பந்தம் செய்துள்ளனர். தன்னுடைய பர்சனல் விஷயங்களை முடித்துவிட்டு ஷூட்டிங்கு வந்த பிறகு தான் அவருக்கே இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. தன்னுடைய கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடித்திருப்பதை பார்த்த ரியா, சீரியல் குழுவிடம் இதைப்பற்றி கேட்கும் போது சிம்பிளாக கம்யூனிகேஷன் பிரச்சினை காரணமாக உங்களை சீரியல் இருந்து தூக்கி விட்டதாக கூறியுள்ளனர். ஹீரோயின் மாற்றத்திற்கான இந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.