வெளிநாட்டில் நடிகர் அஜித் கார் ஓட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. 
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இத்திரைப்படம், பிப்ரவரி 8ஆம் தேதி Netflix OTTயில் வெளியானது. OTTயிலும் துணிவு திரைப்படம் உலக அளவில் முதலிடம் பெற்று டிரெண்டானது. சமீபத்தில் நடிகர் அஜித் லண்டன் பயணத்தை முடித்துவிட்டு போர்ச்சுகல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதுதொடர்பான புகைப்படங்களை நடிகையும், அஜித்குமாரின் மனைவியுமான ஷாலினி, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
வீடியோ வைரல்
போர்ச்சுக்கல் பயணத்தை முடித்த நடிகர் அஜித், ஸ்காட்லாண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்காட்லாண்டில் கார் ஓட்டும் நடிகர் அஜித்தின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. ஷூட்டிங் இல்லாத ஓய்வு சமயத்தில், பல நாடுகளுக்கு பைக் மற்றும் காரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது நடிகர் அஜித் வழக்கமாக கொண்டுள்ளார். சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சமயத்தில் ரசிகர்களிடம் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும், வீடியோக்களும் அடிக்கடி சமூக வலைதளங்களில் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஸ்காட்லாண்டில் கார் ஓட்டும் வீடியோவும் அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.















































