கிரிக்கெட் வீரர் தோனி போலீஸ் சீருடையில் புல்லட் ப்ரூப் ஜாக்கெட் அணிந்து நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

கிரிக்கெட் கிங்

இந்தியாவுக்கு, ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட், டி20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை என்று அனைத்தையும் பெற்று கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி. ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் இடம் பெற்று கேப்டனாக விளையாடி கலக்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல விளம்பரப் படங்களிலும் தோனி நடித்துள்ளார்.

தயாரிப்பு நிறுவனம்

தோனி என்டர்டைன்மென்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை சமீபத்தில் தோனி தொடங்கினார். தற்போது இந்த நிறுவனம் தயாரிக்கும் LGM (LETS GET MARRIED) என்ற திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் நாயகனாக ஹரிஷ் கல்யாண் மற்றும் நாயகியாக லவ் டுடே பட புகழ் இவானா நடிக்கின்றனர்.

வைரலாகும் புகைப்படம்

கிரிக்கெட் வீரராக அனைவருக்கும் பரிக்ஷயமான தோனி, தற்போது போலீஸ் சீருடையில் புல்லட் ப்ரூப் ஜாக்கெட் அணிந்து நிற்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. தோனியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் படத்தில் நடிக்கின்றாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் இது விளம்பர படமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். விளம்பர படமாக இருந்தாலும் சரி, உண்மையிலேயே படமாக இருந்தாலும் சரி, சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களும் தோனியை ரசிப்பார்கள் என்பது உண்மை. கிரிக்கெட்டில் வெற்றி கண்ட தோனி, சினிமாவில் நுழைந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் யூகிக்க தொடங்கி விட்டனர்.

அன்பு கட்டளையிடும் ரசிகர்கள்

ஏற்கனவே கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருப்பதால் தோனிக்கும் அந்த ஆசை வந்து விட்டதா? என்றும் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த கெட்டப் உங்களுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது, இந்த போலீஸ் உடைக்கு கச்சிதமாக இருக்கிறீர்கள், விரைவில் உங்களை வெள்ளி திரையில் காண ஆவலாக இருக்கிறோம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். நீங்கள் நடிகராக உருவெடுக்க வேண்டும் என்று அன்பு கட்டளையும் போட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here