தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிக்ழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் தற்போது விக்ரமன், அசீம், ஷிவின், மைனா, அமுதவாணன் ஆகிய 5 பேர் மட்டுமே உள்ளனர். இதில் வெற்றி பெறப்போவது விக்ரமனா அல்லது அசீமா என்பது தான் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு. இதற்கிடையே பிக் பாஸ் போட்டியில் விக்ரமனை வெற்றி பெறச் செய்வோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது ஒருபுறம் ஆதரவையும், மறுபுறம் சர்ச்சையையும் கிளப்பியது. திருமாவளவனின் டுவீட்டை கோட் செய்து, “இது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட். மரியாதைக்குரிய அரசியல் தலைவரும், பதவியில் இருக்கும் எம்.பி.யுமான ஒருவர், ரியாலிட்டி ஷோவில் போட்டியிடும் போட்டியாளருக்கு வாக்களிக்க தனது கட்சி உறுப்பினர்களிடம் எப்படி சொல்லலாம்?” என்று கேட்டு நடிகை வனிதா விஜயகுமார் டுவீட் ஒன்றை போட்டிருந்தார். பின்னர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வனிதா வெளியிட்டுள்ளார். அதில், “தொடர்புடைய யூடியூப் சேனலுக்கு ஃபோன் செய்து மிரட்டியதோடு, என்னை எச்சரிக்க முயல்கின்றனர். யாருக்கும் எதுக்கும் பயந்தவ நான் இல்லை… உங்க அரசியல் புத்தி என்னனு காலம் காலமா பாத்திருக்கோம். நேர்மையா மக்களுக்கு நல்லது பண்ணி முன்னேற பாருங்கம், உங்க அரசியல் எல்லாம் எங்கிட்ட வச்சிக்காதீங்க. எனக் குறிப்பிட்டிருக்கிறார்.