மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் தனது அழகின் ரகசியம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

வளரும் நடிகை

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் – மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ‘தடக்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி கபூர், தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதுடன் சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் அவர் நடித்த ‘மிலி’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஆர்வம்

தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசுபொருளாக இருக்க விரும்பும் ஜான்வி கபூர், தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது என்று சொல்லி இருமொழிகளிலும் அவர் வாய்ப்பு தேடுகிறார். விரைவில் தமிழ் படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அழகின் ரகசியம்

இந்த நிலையில் தனது அழகின் ரகசியம் குறித்து நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது; ”எனது அழகு ரகசியம் யோகா மற்றும் உடற்பயிற்சி. வேலையில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தவறாமல் ஜிம்முக்கு செல்வேன். உடல், மனம் இரண்டையும் ஒருமைப்படுத்த முடிந்தால் வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களோடு முன்னேறலாம். எனது பார்வையில் உடற்பயிற்சி என்றால் ஜிம்முக்கு செல்வது மட்டும் இல்லை. பல வழிகளில் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எடை தூக்குவது, கார்டியோ, நீச்சல், யோகா போன்றவற்றை செய்கிறேன். உடற்பயிற்சியோடு யோகா செய்வது நல்ல பலனை கொடுக்கும். அழகையும் தரும். எனது சினிமா வாழ்க்கை சம்பந்தமான ஏற்றத்தாழ்வுகள், கஷ்ட நஷ்டங்களை எதிர்கொண்டு மகிழ்ச்சியாக முன்னேற யோகாவும் உடற்பயிற்சியும்தான் காரணம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here