வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷியாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள இப்படத்திற்கு போட்டியாக அஜித்தின் ‘துணிவு’ படமும் ரிலீசாக உள்ளது. இதனால் இரண்டு படங்களும் போட்டி போட்டி அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். கடந்த வாரம் ‘துணிவு’ படத்தின் டிரைலர் வெளியானது. அதற்கு போட்டியாக தற்போது விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி உள்ள இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.













































