ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியவர் அட்லீ. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் வலம் வரும் இவர், தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அட்லீ, ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே தான் அப்பாவாக போகும் விஷயத்தை அட்லீ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஷேர் செய்துள்ள பதிவில், எங்களின் குடும்பம் பெரிதாகிறது. நாங்கள் அப்பா அம்மா ஆகப்போகிறோம். எங்களுடைய இந்த பயணம் முழுவதற்கும் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் பிரார்த்தனைகளும் தேவை.. வித் லவ் அட்லி, பிரியா அன்ட் பெக்கி என குறிப்பிட்டுள்ளார். அட்லீயின் இந்த பதிவை பார்த்த சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.















































