நடிகர் சந்தீப் கிஷனும் நடிகை ரெஜினாவும் காதலிப்பதாக கிசுகிசு வெளியாகி உள்ளது.

முன்னணி நடிகை

தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. அதன்பிறகு நிர்ணயம், ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கன்னடம் மற்றும் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

நெருக்கமான புகைப்படம்

32 வயதாகும் ரெஜினாவுக்கு நடிகர் சந்தீப் கிஷனுடன் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு வெளியாகி உள்ளது. இருவரும் தமிழில் ‘மாநகரம்’ படத்தில் இணைந்து நடித்து இருந்தனர். ரெஜினா தற்போது தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சந்தீப் கிஷன் வாழ்த்து தெரிவித்து வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதோடு இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இதை வைத்தே இருவரும் காதலிப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை அவர்கள் இதுவரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here