அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘லத்தி’. வரும் டிச.,22-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிக்ழச்சியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், ஆக்ஷன் திரைப்படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்தார். ஒரு திரைப்படத்திற்கு 148 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால், எந்த அளவிற்கு உழைப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் என தனக்கு தெரியும் எனவும் அவர் கூறினார்.