வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய நபரை சந்தித்தால் திருமணம் செய்து கொள்வேன் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

என்றும் இளமை
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக தொடர்ந்து நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார். என்றும் இளமை என்றால் அது நம்ம திரிஷா தான் என ரசிகர்கள் எப்போதும் கூறி வருகின்றனர். 38 வயதை கடந்துவிட்ட திரிஷாவை பார்க்கும் அனைவருமே அவருக்கு 18 வயது என்றுதான் சொல்லத்தோன்றும் அளவிற்கு, தனது அழகால் சொக்க வைப்பவர் திரிஷா. அபியாக, ஜெஸ்ஸியாக, ஜானுவாக கொண்டாடப்படும் திரிஷாவின் இடத்தை, எந்த ஒரு தமிழ் நடிகையும் இதுவரை பிடிக்கவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

விருப்பம்
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து நடிகை திரிஷா பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “கடமைக்காக திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்ய விரும்பவில்லை. மகிழ்ச்சி இல்லாத ஒரு திருமணத்தை செய்து வாழ எனக்கு விரும்பவில்லை. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய ஒரு நபரை சந்திக்க வேண்டும். அப்படி ஒருவரை சந்தித்தால் நிச்சயம் திருமணம் செய்வேன்”. இவ்வாறு திரிஷா தெரிவித்துள்ளார்.















































