நடிகை நயன்தாரா புதிய திரைப்படங்களை ஒப்புக் கொள்வதில்லை என்ற முடிவை எடுத்ததை அடுத்து அவர் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.
லேடி சூப்பர் ஸ்டார்
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அழைக்கும் அளவிற்கு, அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் நயன். முதன்முதலில் ‘மனசினக்கரே’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான நயன்தாரா, அதன்பிறகு தமிழில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமானார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் அவர், தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
திருமணம்
17 வருடங்களாக திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் தாய்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தங்களது தேனிலவை கொண்டாடினர்.
விலக முடிவு
தற்போது மலையாளத்தில் உருவாகிவரும் ‘கோல்ட்’ மற்றும் மாயா இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கிவரும் ‘கனெக்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜவான்’ படத்திலும், ஜெயம் ரவியுடன் ‘இறைவன்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் கைவசம் உள்ள படங்களை முடித்து விட்டு சினிமாவை விட்டு விலக நயன்தாரா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பின்னர் ரவுடி பிக்சர்ஸ் சார்பாக படங்களை தயாரிப்பதில் மட்டுமே ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.