தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை தமன்னாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகை
17 வருடங்களாக சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, பிரபுதேவா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, பாகுபலி போன்ற பல மெகா ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். ஒரு சில ஹிந்தி படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். 17 வருட சினிமா பயணத்தில், பல ரசிகர்களை அவர் தன் வசம் வைத்துள்ளார்.
வைரல் புகைப்படம்
நடிகை தமன்னாவிற்கு சில நாட்களாக பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இருப்பினும் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் கேலரியில் அமர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமன்னா. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.















































