தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை நமீதாவின் ‘பிரக்னென்சி போட்டோஷீட்’ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“மச்சான்ஸ்”
2004-ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நமீதா. அதன்பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தார். கவர்ச்சியில் தாராளம் காட்டியதால் நமீதாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது. தனது திறமையான நடிப்பாலும், கவர்ச்சியாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தினார். இளைஞர்களை செல்லமாக மச்சான்ஸ் என்று அழைக்கும் நமீதாவின் சொல்லுக்கு ரசிகர்கள் மயங்கியே போனார்கள்.
திருமணம்
தமிழில் பட வாய்ப்புகள் குறையவே மலையாளம், தெலுங்கு பக்கம் சென்றார் நமீதா. மேலும் பிக் பாஸ் சீசன் 1, ரியாலிட்டி ஷோக்களின் நடுவர் என சின்னத்திரையிலும் கலக்கினார். பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகு முக்கியமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நமீதா.
வைரல் போட்டோ
இந்த நிலையில், நமீதாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2017-ம் ஆண்டு திருமணம் வீரேந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்ட நமீதா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதுபோன்ற கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் ‘பிரக்னென்சி போட்டோஷூட்’ பிரபலங்களுக்கு பிடித்த ஒன்று. அந்த வகையில் நடிகை நமீதாவும் ‘பிரக்னென்சி போட்டோஷூட்’ எடுத்துள்ளார். அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நமீதா பகிர்ந்துள்ளார்.