நாமக்கல் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகி உயிரிழந்த தகவலறிந்த நடிகர் சூர்யா அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தவர் ஜெகதீஷ். இவர் கடந்த 22ம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ரசிகர் மன்ற நிர்வாகி உயிரிழந்த தகவல் அறிந்த நடிகர் சூர்யா, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஜெகதீஷின் படத்திற்கு கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் ஜெகதீசனின் மனைவி ராதிகாவிற்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.