அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் மனமுடைந்து போன பிரபல பாடகி ஜெனிஃபர் லோபஸ் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளதாக கூறியுள்ளார்.

இளைஞர் வெறிச்செயல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில் லத்தீன் அமெரிக்கர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் புகுந்த 18 வயதுள்ள இளைஞர், அங்கு பயின்று வந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 19 மாணவர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரும் கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வுகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

அச்சமாக உள்ளது

இந்த செய்தியை அறிந்து வேதனையுற்ற பிரபல பாடகி ஜெனிஃபர் லோபஸ், தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அந்த அழகான குழந்தைகளுக்கும் அவர்களது ஆசிரியர்களுக்கும் நிகழ்ந்துள்ளதைக் கண்டு தனது இதயம் உடைந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் நடைபெறுகிற இத்தகைய வன்முறைகளை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், இதுபோன்ற சம்பவங்களால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்குக் கூட பயமாக உள்ளதாக கூறியுள்ளார். நடிகை, பாடகி, இசைப்பதிவு தயாரிப்பாளர், நடனக் கலைஞர், ஆடை அலங்கார வடிவமைப்பாளர், தொலைக்காட்சித் தயாரிப்பாளர் என பல பரிணாமங்களை கொண்டவர் ஜெனிஃபர் லோபஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here