சினிமாவில் நடிக்க வந்த புதிதில் அவமானங்களை எதிர்கொண்டேன் என நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.
பிசி நடிகை
தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. தற்போது தனுசுடன் திருச்சிற்றம்பலம், கார்த்தியுடன் சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து பரும் இவர், அஜய் தேவ்கானுடன் இணைந்து வெப் தொடர் ஒன்றிலும் நடித்து இருக்கிறார்.
கேலி, கிண்டல்
இந்த நிலையில் சமீபத்தில் ராஷி கண்ணா அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்களை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் நிறைய அவமானங்களை எதிர்கொண்டேன். நான் அப்போது உடல் எடை கூடி குண்டாக இருந்தேன். எனது உடல் தோற்றத்தை பார்த்து பலரும் கேலி செய்தார்கள். சமூக வலைத்தளங்களிலும் கேலி செய்தனர். இதனால் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. பின்னர் கடும் உடற்பயிற்சிகள் செய்து எனது தேகத்தின் தோற்றத்தை வசீகரமாக மாற்றினேன்” என்றார்.