பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, இந்தியாவில் இருந்து தப்பி ஈக்வேடார் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக அறிவித்திருக்கிறார். அவ்வப்போது தான் சொற்பொழிவாற்றும் வீடியோக்களை நித்தியானந்தா வெளியிட்டு வந்தாலும், அவருக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றும் வகையில், கும்பலாக சேர்ந்து நடனமாடும் வீடியோக்களை அவரது ருத்ர கன்னிகளும் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், சாரா லாண்டரி என்ற வெளிநாட்டு பெண், நித்தி மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுதொடர்பாக பெங்களூரில் உள்ள பிடதி போலீசாருக்கு, இ-மெயிலில் புகார் அனுப்பியுள்ள அவர், ‘கைலாசா என்ற நாட்டில் நித்தியானந்தாவும், அவரது சீடர்களும் அங்குள்ள பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், தனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள் என்றும் கூறி உள்ளார்.