நடிகை திரிஷா தனது 19 வருட திரைப்பயணத்தை சமீபத்தில் நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாயுள்ளார்.

என்றும் இளமை

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக தொடர்ந்து நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். என்றும் இளமை என்றால் அது நம்ம திரிஷா தான் என ரசிகர்கள் எப்போதும் கூறி வருகின்றனர். 36 வயதை கடந்துவிட்ட திரிஷாவை பார்க்கும் அனைவருமே அவருக்கு 18 வயது என்றுதான் சொல்லத்தோன்றும், அளவிற்கு தனது அழகால் சொக்க வைப்பவர் திரிஷா. அபியாக, ஜெஸ்ஸியாக, ஜானுவாக கொண்டாடப்படும் திரிஷாவின் இடத்தை, எந்த ஒரு தமிழ் நடிகையும் இதுவரை பிடிக்கவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

கேக் வெட்டி கொண்டாட்டம்

ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுனின் தோழியாக திரையுலக பயணத்தைத் தொடங்கிய திரிஷா, தற்போது வரை திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகும் பொன்னியின் செல்வன், கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆக தயாராக இருக்கின்றன. இந்த மகிழ்ச்சியைத் தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் திரிஷா. அந்த புகைப்படத்தை தனது உடுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள திரிஷா, உங்கள் அனைவராலும் நான் இந்த இடத்தில் இன்று இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த 19 வருடங்களுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here