கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்தில் இருந்து குறவர் குடும்பத்தை நடுவழியில் இறக்கி விடப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து அதிர்ச்சி

கடந்த சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வரும் பெண்ணை அரசு பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்று குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு ஏழைக் குடும்பம், நடுவழியில் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடமைகளும் சாலையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா?

இந்த சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அரசுப்பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக் கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு ஏழைக் குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன. ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம் மரியாதை காட்டாத ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here