தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உடல்நலக் குறைவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், அரசியலில் ஈடுபடாமல், முக்கிய சந்திப்புகளில் மட்டும் பங்கேற்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவருக்கு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கெத்தாக அமர்ந்திருக்கும் விஜயகாந்த்

இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் விஜயகாந்த் துபாய் புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தான் நலமாக இருப்பதாக விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்”. இவ்வாறு விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். கால் மேல் கால் போட்டுக் கொண்டு விஜயகாந்த் அமர்ந்திருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here