தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேவேலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு வரும் 14-ம் தேதி காலை 6 மணிக்கு முடிவடைகிறது. அதற்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கோண்டார். அப்போது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
கூடுதல் தளர்வுகள்
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கொரோனா நிலவரம் மற்றும் அதிகாரிகள் வழங்கிய பரிந்துரைகளை ஆராயந்த முதலமைச்சர், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை வரும் 21-ம் தேதி வரை மேலும் ஒரு வாரம் நீட்டித்து அறிவித்துள்ளார். அதன்படி 27 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் அனுமதி
தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படவும், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.















































