தனது திருமணம் தொடர்பாக வெளியான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
சோதனைகளை கடந்த வனிதா
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. திரைப்பிரபலங்களும், நெட்டிசன்ஸூம் நடிகை வனிதாவிற்கு அறிவுரையும் அதேசமயம் கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர். இருப்பினும் அனைத்தையும் துணிச்சலாக எதிர்கொண்ட அவர், காதல் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தினார். பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டபோது, அவரை மருத்துவமனையில் அனுமதித்து வனிதா கவனித்துக் கொண்டார். இந்த நிலையில், திருமணமான சில தினங்களிலேயே வனிதா – பீட்டர் பால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தனர்.
4-வது திருமணம்?
தற்போது தனது மகள்களுடன் வனித தனியாக வசித்து வருகிறார். பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதன் மூலம் இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்து வருகிறார் நடிகை வனிதா. இப்படி இருக்கையில், வனிதாவின் 4-வது திருமணம் குறித்து தகவல்கள் வெளிவந்தன. வட இந்தியாவைச் சேர்ந்த பைலட் ஒருவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்துகொண்டதாகவும், ஆனால் திருமணம் குறித்து அவர் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
சிங்கிள் மற்றும் அவைலபிள்
ஆனால், வனிதா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்தி என்று அவர் விளக்கமளித்திருக்கிறார். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் வனிதா கூறியுள்ளதாவது; உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போது சிங்கிள் மற்றும் அவைலபிள். தயவுசெய்து எனது திருமணம் குறித்த வதந்திகளை யாரும் பரப்பவோ நம்பவோ வேண்டாம். இவ்வாறு வனிதா அதில் குறிப்பிட்டுள்ளார்.