சுஷாந்த சிங் ராஜ்புத் பயோபிக் படத்தை வெளியிட தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான ‘எம்.எஸ்.தோனி: தி அன்ட்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்து பிரபலமானார் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவரது நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. இளம் நடிகரான சுஷாந்த் சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது. வாரிசு நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் அளித்து தன்னை ஒதுக்கியதால் சுஷாந்த் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

நீதிமன்றம் தடை

இந்த நிலையில், சுஷாந்த் சிங் வாழ்க்கையை “நய்யே: தி ஜஸ்டிஸ்” என்ற பெயரில் படமாக்கப்பட்டது. திலீப் குலாட்டி இயக்கிய இப்படத்தில், சுஷாந்த் சிங் வேடத்தில் ஜூபர் கானும், காதலி ரியா சக்கரபோர்த்தி வேடத்தில் ஸ்ரேயா சுக்லாவும் நடித்துள்ளனர். வருகிற 11-ம் தேதி இப்படம் ரிலீசாக இருந்த நிலையில், சுஷாந்த் சிங் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங், படத்துக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை “நய்யே: தி ஜஸ்டிஸ்” படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here