தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஊரடங்கு காலத்தில் பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி. மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்களுக்கு அனுமதி. வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி இன்றும், நாளையும் அரசு, தனியார் பேருந்துகள் செல்ல அனுமதி. பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி. நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி. பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கலாம். உரிய மருத்துவ காரணங்கள், இறப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதி. உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.