தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மாநகராட்சிகள், நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள் இயங்க அனுமதியில்லை. புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம். திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது. இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை. உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி – அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்க அனுமதி. ஏப் 26-ந் தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here